அக்டோபர் மாதத்தில் முதல் பாதியில் எல் ஜி நிறுவனத்தின் ஐபிஓ வெளியாகும். எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஐபிஓ வெளியிடுவதற்கான ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்த ஆண்டு மார்ச் மாதம் அங்கீகரம் கிடைத்தது.
தென் கொரிய நிறுவனமான ஐபிஓவில் உள்ளூர் பிரிவில் 15% அல்லது 10.2 கோடி பங்குகளை விற்பனை செய்யும். கடந்த ஆண்டு அக்டோபரில் ஹூண்டாயின் மெகா ஐபிஓவுக்குப் பிறகு, இந்தியாவில் ஒரு கொரிய நிறுவனம் வெளியிடும் இரண்டாவது பெரிய பங்கு வெளியீடு இதுவாகும்.
மோர்கன் ஸ்டான்லி இந்தியா, ஜேபி மோர்கன் இந்தியா, ஆக்சிஸ் கேபிடல், பிஓஎஃப்ஏ செக்யூரிட்டீஸ் இந்தியா மற்றும் சிட்டிகுரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா ஆகியவை ஐபிஓவிற்கான முன்னணி மேலாளர்களாக உள்ளன.
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஆரம்பத்தில் அதன் இந்திய ஐபிஓவை ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்க இலக்கு வைத்தது. ஆனால் சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் வர்த்த�� மோதல்கள், அமெரிக்க கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட உலகளாவிய காரணிகள் ஆகியவற்றால் ஐபிஓ திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.